என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளூரில் உள்ள சந்திப்பு விநாயகர் கும்பாபிஷேக விழா.
    X
    வெள்ளூரில் உள்ள சந்திப்பு விநாயகர் கும்பாபிஷேக விழா.

    விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

    முசிறி வெள்ளுர் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த வெள்ளுரில் சந்திப்பு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

    விழாவில் விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை ஆகிய பூஜைகள் செய்யப்பட்டது.  

    பின்னர் காவிரி ஆற்றில்இருந்து கொண்டு வரப்பட்டு, மகா பூஜைகள் செய்யப்பட்ட, புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

    இந்நிகழ்ச்சியில் இப்பகுதியை சுற்றியுள்ள அந்தரப் பட்டி, வெள்ளூர், திரணியம்பட்டி சாலப்பட்டி பஸ்கரன் பட்டி, ஆணைப்பட்டி,

    சாணாரப்பாளையம், செல்லாயிமேடு ஆகிய கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×