என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் செய்த காட்சி.
கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் செல்வி பாண்டுரங்கன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கரி, நாராயணன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்.
ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் தொகையினை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு இந்து சமய அறநிலையத் சட்டத்தின்படி பயனாளிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வீட்டுமனை பட்டா வழங்க கோரி அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை அளித்தனர்.
Next Story






