என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திட்டக்குடி அருகே விபத்து: மினி லாரி மீது மோதி கார் டிரைவர் பலி

    திட்டக்குடி அருகே மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    திருச்சியில் இருந்து சென்னைக்கு மினி லாரி ஒன்று சென்றது. அது திட்டக்குடி அருகே மா புடையூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் மோதியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் மனோஜ் படுகாயம் அடைந்தார். இவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×