என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கார்கள் மோதி 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்5 May 2022 12:05 PM IST (Updated: 5 May 2022 12:05 PM IST)
கன்னிய கோவிலில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ராமு. (வயது 34). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான காரை எடுத்துக்கொண்டு கடலூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த காரில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோபி (32) என்பவர் பயணம் செய்தார்.
புதுவை-கடலூர் ரோட்டில் கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த மற்றொரு கார் திடீரென ராமு ஓட்டிச் சென்ற கார்மீது மோதியது.
இதில் ராமு ஓட்டிச் சென்ற காரின் முன் பக்கம் சேதமாகி இடிபாடுகளில் ராமுவும் கோபியும் சிக்கிக் படுகாயம் அடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×