search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிக்கு கிராம பொதுமக்கள் சீர் வரிசையாக வழங்கிய பொருட்கள்.
    X
    பள்ளிக்கு கிராம பொதுமக்கள் சீர் வரிசையாக வழங்கிய பொருட்கள்.

    கந்தர்வகோட்டை அரசு பள்ளிக்கு சீர்வரிசை

    கந்தர்வகோட்டை அரசு பள்ளிக்கு பொது மக்கள் மேளதாளத்துடன் சென்று சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப் பட்டியல் செயல்படும்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் பொது  மக்கள்சீர்வரிசை வாரி வழங்கிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாப்பாத்தி காசிநாதன் முன்னிலை வகித்தார். பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.  

    சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனருமான ஆசிரியர் மணிகண்டன்,  

    தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், காவல்துறை துணை ஆய்வாளர் ராசத்தி,  இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரஹ்மதுல்லாஹ், தங்கராசு, ஊராட்சி செயலர் திருஞானம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளிக்கு தாய் மாமன் சீர் செய்வதைப் போல பொது மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் தாங்களாகவே முன்வந்து பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள்  தண்ணீர் தொட்டி அறிவியல் அறிஞர்களின் புகைப்படங்கள் பீரோக்கள் மின்விசிறி டேபிள் சேர், கண்ணாடி, கணினி, மாணவர்களுக்கு மதிய உணவு சாப்பிடுவதற்கு தட்டு,  

    டம்ளர்கள், தரை விரிப்புகள், எழுதுபொருட்கள், குடம், வரலாற்று தலைவர்களின் புகைப்படங்கள், பூமிப்பந்து, மரக்கன்றுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை ஊர் பொதுமக்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆடிப்பாடி அணிவகுத்து பள்ளிக்கு வந்து சீராக வழங்கிய சிறப்பித்தார்.
     

    பின்னர் மாணவர்களின் பேச்சு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கலைமணி, சுகன்யா ஆகியோருடன் தன்னார்வலர்கள் அகிலா, ராணி, லாபஸ்னிசந்தோஷ்பிரியா, பவித்ரா, திவ்யா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    நிகழ்வில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×