என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு, சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு, சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து.விவசாயி. இவருடைய மனைவி சகுந்தலா (வயது 65). இவர் நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள மாவு அரைக்கும் கடைக்கு சென்றார்.அங்கிருந்து பின்னர் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென சகுந்தலாவை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் சகுந்தலா வீட்டிற்கு வந்து தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வழிப்பறி நடந்த இடத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது மீண்டும் தொடங்கியிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






