என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூரம்பட்டி வேலா வீதியை சேர்ந்தவர் குப்புசாமி (31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக குப்புசாமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக குப்புசாமி கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் மரச்சட்டத்தில் கயிற்றால் தூக்குபோட்டு கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே குப்புசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






