என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பிளஸ்- 2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது

    ஈரோடு மாவட்டத்தில் நாளை பிளஸ்- 2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது. காப்பி அடிப்பவர்களை பிடிக்க 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளை பிளஸ்- 2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது. காப்பி அடிப்பவர்களை பிடிக்க 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் பிளஸ்- 2, பிளஸ் -1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வரும் 31-ந் தேதி வரை  நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் செய்து வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) பிளஸ் - 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ-மாணவிகளும் எழுதுகின்றனர். இவர்களுக்கு 104 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேப்போல் பிளஸ்- 2 தேர்வை தனி தேர்வர்கள் 416 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    இவர்கள் மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணிப்பார்கள். மாணவர்கள் தேர்வு அறைக்கு 30 நிமிடத்திற்கு முன்பே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் தேர்வு அறையில் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    தேர்வறையில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    பிளஸ்-1 பொதுத்தேர்வு வரும் 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி நிறைவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு வரும் 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    பிளஸ்- 1 பொதுத்தேர்வினை 27,656 மாணவ-மாணவிகளும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 28,365 மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர். பிளஸ்-1 பொதுத்தேர்வை 203 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு தேர்வை 871 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கு மாவட்டத்தில் 107 தேர்வு மையங்களும். எஸ். எஸ்.எல். சி தேர்வுக்கு மாவட்டத்தில் 118 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×