என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலி
பெருந்துறை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சிக்கோவில் ரோடு, செங்காடு பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே மற்றொரு மொபட்டில் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் (40). என்பவர் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு மோதியது.
இதில் பழனிச்சாமிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதில் வெங்கடா ஜலபதிக்கு காயம் ஏற்பட்டு அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






