என் மலர்
உள்ளூர் செய்திகள்

விமல் ராஜ்.
விபத்தில் கல்லூரி மாணவர் பலி
ஆப்பக்கூடல் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி பாரதி தாசன் வீதியை சேர்ந்த சண்முகம். இவரின் மகன் விமல்ராஜ் (வயது 17). இவர் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று விமல்ராஜ் மோட்டர் சைக்களில் அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கீழ்வாணி ஆஞ்சநேயர் கோவில் பிரிவுக்கும், செங்காட்டு புதூர் பிரிவுக்கும் இடையே உள்ள வளைவில் விமல்ராஜ் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த விமல்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டி பாளை யத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விமல்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






