என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபி செட்டிபாளையம் வெங்கடரமண பெருமாள், கரியகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    கோபி செட்டிபாளையம் வெங்கடரமண பெருமாள், கரியகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    வெங்கடரமண பெருமாள், கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    கோபிசெட்டிபாளையம் அருகே வெங்கடரமண பெருமாள், கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே வெங்கடரமண பெருமாள், கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் விசாலாட்சி உடனமர் விஸ்வநாத சுவாமி,ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடரமண பெருமாள், கரியகாளியம்மன் கோவிில் கும்பாபிஷேகம், இன்று காலை நடைபெற்றது. 

    இதையொட்டி 29-ந் தேதி மகாகணபதி ஹோமம் நவகிரக ஹோமம் நடைபெற்றது. 2-ந் தேதி முதல் கால யாக பூஜை நடந்தது. 3-ந் தேதி இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று 4-ந் தேதி புதன்கிழமை 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
     
    அதைத்தொடர்ந்து காலை 7 மணியளவில் விசாலாட்சி உடனமர் விசுவநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வெங்கடரமண பெருமாள், ஸ்ரீ கரிய காளியம்மன் ஆகிய கோவில்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றன. 
     
    அதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம், மகாதீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் கோபி, காசிபாளையம், அரசூர், அக்கரை கொடிவேரி, அழுக்குளி, குருமந்தூர்,  நல்லகவுண்டன்பாளையம் கரட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×