search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மைலாப்பூர் கிராமத்தில் கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா

    மைலாப்பூர் கிராமத்தில் கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து  ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் தேங்காயை உடைத்து சாம்பிராணி, சூடம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர்

    தங்களது துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடிவிழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர்.

    பொதுவாக  பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி,மதம் பாராமல் அனைவரும்  ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் மீன்படி திருவிழா கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றிய காரணத்தாலும் சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெற வில்லை.

     இந்நிலையில் இன்று மைலாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா கோணாங்கண்மாயில் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த  கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள்  ஊத்தா, வலை,கூடை,பரி,கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர்.

    அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி,கெண்டை, அயிரை, கட்லா,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன பிடித்த மீன்களுடன் மகிழ்ச்சியில் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.


    Next Story
    ×