என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா

    சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா 8-ந் தேதி நடக்கிறது.
    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா 8-ந் தேதி நடக்கிறது.

    சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு ஆண்டும் உலக நன்மை, மழை வேண்டியும், நாடு செழிக்கவும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா நாளை (வியாழக்கிழமை) மாலை சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் தொடங்குகிறது.

    இதையொட்டி வரும் 7-ந் தேதி (சனிக்கிழமை)  அதிகாலை 5 மணிக்கு  சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பாளை யம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக  தீர்த்தம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    அன்று காலை 7 மணிக்கு சென்னிமலை மலைக் கோவிலில் கணபதி ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் அன்று மாலை  விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், தேவார திருமுறை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுப்பிரமணியசுவாமிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.

    தொடர்நது அன்று காலை 7.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு, வேதிகார்ச்சனை, மகா லஷ்மி, மகா ஜெய சுப்ரமண்ய யாக ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது. 

    அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை, அதைத்தொடர்ந்து 1  மணிக்கு உற்சவமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை முருகன் அடிமை சுப்புசாமி தலைமையில் அக்னி நட்சத்திர அன்ன தான வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.–
    Next Story
    ×