என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்
திட்டக்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு
திட்டக்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்தால்தான் நெல் கொள்முதல் செய்வேன் என்று அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகள் தமிழக அரசு சொன்ன விதிமுறைகளைப் பின்பற்றாமல் இரவு நேரத்தில் நெல் கொள்முதல் செய்து கொண்டு விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்குவதாக புகார் எழுந்து உள்ளது.
இது மட்டுமல்லாமல் விவசாயிகளை மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்தால்தான் நெல் கொள்முதல் செய்வேன் என்று ஏழை எளிய விவசாயிகளை மிரட்டி வாட்டி வதைப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் மக்கள் கட்சி, வெலிங்டன் நீர்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

Next Story