search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி : இலவச மின் இணைப்பு திட்டத்தில் 259 விவசாயிகளுக்கு மின் இணைப்பு
    X
    நீலகிரி : இலவச மின் இணைப்பு திட்டத்தில் 259 விவசாயிகளுக்கு மின் இணைப்பு

    நீலகிரி : இலவச மின் இணைப்பு திட்டத்தில் 259 விவசாயிகளுக்கு மின் இணைப்பு

    இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
    ஊட்டி, 
    தமிழ்நாடு மின்வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ஆகியவற்றின் சார்பில் உழவர்களுக்கு 1 லட்சம் புதிய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் முதல்- அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.  
     
    நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் புதிய மின் இணைப்புகள் பெறுவதற்கான ஆணையினை விவசாயிகளுக்கு வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 259 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயம் செய்து பயனடைந்து இருக்கின்றனர்.
    இதுகுறித்து விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயி ரமேஷ் கூறும்போது:-
    நான் கடநாடு ஆயட்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 2½ ஏக்கர் நிலம் உள்ளது. அதில் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட் ஆகியவை பயிரிட்டு வருகிறேன். மின் மோட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்வதற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ.7ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். 
     
    இதனால் பிற செலவுகளை மேற்கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் முதல்-  அமைச்சர் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பினை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். இத்திட்டம் குறித்து நான் தெரிந்து கொண்டு உடனடியாக இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தேன். இத்திட்டத்தின் கீழ் என்னுடைய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கிடைத்தது.
    மின் மோட்டார் மூலம் தினசரி தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சி நல்ல முறையில் விவசாயம் செய்து வருகிறேன். மின்கட்டணம் செலவும் மீதமானது. இந்த தொகை எனது குழந்தைகளின் படிப்பு செல்விற்கு மற்றும் குடும்ப செலவினை மேற்கொள்ள மிகவும் உதவியாக உள்ளது என்றார். 
     
    விவசாயி கஜேந்திரன் கூறும்போது,
    நான் ஸ்டோனிஹவுஸ் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட் ஆகியவை பயிரிட்டு வருகிறேன், இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தேன்.
    ஆனால் நீண்ட நாட்களாக மின் இணைப்பு கிடைக்கவில்லை. முதல்- அமைச்சர் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் இலவச மின் இணைப்பு  வழங்கப்பட்டது. 
    இதனால் விவசாயம் மூலம் நல்ல லாபமும் கிடைத்து வருகிறது. மேலும் இலவசமாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்திய முதல் -அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்தும் கொள்கிறேன்.
     
    மக்களின் நலன்காப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட விவசாயிகள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×