என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    பா.ஜ.க. அலுவலகமாக மாறி வரும் ஆளுநர் மாளிகை

    பா.ஜ.க. அலுவலகமாக மாறி வரும் மாநில ஆளுநர் அலுவலகம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:


    ழகத்தில் பா.ஜ.க. அலுவலகமாக மாநில ஆளுநர் அலுவலகம் மாறி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது :

    தமிழகத்தில் மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்த ஆளுநர் ரவி முயற்சித்து வருகிறார். அவர் பா.ஜ.கவின் மேலிட பிரதிநிதி போன்று செயல்பட்டு வருகிறார். ஆளுநர் அலுவலகமானது பா.ஜ.கவின் அலுவலகமாக மாறி விட்டது.

    அவரது செயல்பாட்டின் மூலம் தமிழகத்தில் குந்தகத்தை விளைவித்து அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சித்து வருகிறது அது நடக்காது என்பதை காலம் உணர்த்தும். தமிழகத்தில் 3031-ல் கூடு பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது.

    கடுமையான வெப்பம் அதிகரித்துள்ளதால் மின்சாரம் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் முழு உற்பத்தி திறனையும் பயன்ப டுத்த முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    எனவே மத்திய அரசு பாரபட்சமின்றி நிலக்கரியை வழங்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் விமர்சனங்கள் வர வேண்டும் என்பதற்கா கவே நிதி மற்றும் நிலக்கரி யில் பாரபட்சமாக செயல்ப டுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
    Next Story
    ×