search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயக்குமார் எம்.எல்.ஏ.
    X
    ஜெயக்குமார் எம்.எல்.ஏ.

    சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் சட்டசபையில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

    பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என சட்டசபையில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என சட்டசபையில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நியூரோ சர்ஜன், பிளாஸ்டிக் சர்ஜன், ரத்தக்குழாய் அடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, இதய பாதிப்பு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் வலியுறுத்தி கூறினார். 

    மேலும் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்க–ணக்கான நோயாளிகள் வந்து பயன்பெறும் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். 

    தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளதால் விபத்தில் பாதிக்கப்படும் 20 முதல் 40 பேர் வரை தினமும் அனுமதிக்கப்படுகிறார்கள். 

    தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நியூரோ சர்ஜன் மருத்துவர் இல்லாத காரணத்தால் தலை காயத்தால் பாதிக்க–ப்ப–டு–பவர்கள் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் செல்லும் வழியி–லேயே பலர் இறந்து விடுகிறார்கள். 

    மேலும் பெருந்துறை சிப்காட்டில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தீ விபத்து, தலைக்காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இங்கு பிளாஸ்டிக் சர்ஜரி, ரத்தக்குழாய் அடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, இதய பாதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள் இல்லாததால் உயர் சிகிச்சைக்காக சேலம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 

    இதனை தவிர்க்க மேற்கண்ட துறைசார்ந்த மருத்துவர்களை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிய மிக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.
    Next Story
    ×