என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பாதுகாப்பு கோரி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள சூரப்பட்டி பெருமாள் மகன் ராஜசேகர்(வயது25). இவர் கோயமுத்தூரில் பேக்கரியில் வேலைபார்த்து வருகிறார். இவரும் பொன்னமராவதி பெரியார் நகரைச்சேர்ந்த சிவராமன் மகள் தனலட்சுமி(20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதில் திருமணத்திற்கு பெண் வீட்டார் ஒத்துகொள்ளாவில்லை.
இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, சூரப்பட்டி பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி 2 பேரும் காரையூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
Next Story






