என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உதவிகள் வழங்கினார்.
போதை பொருள் குறித்த விழிப்புணர்வு விழா
நாகை ஆயுதப்படை வளாகத்தில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்;
நாகப்பட்டினம் ஆயுதப்படை வளாகத்தில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பெருவிழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த நாடகம், தப்பாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது. மேலும் கள்ளச்சாராய விற்பனை செய்து தற்போது மனம் திருந்தியவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 16 பேர்களுக்கு 4,80,000 மதிப்பிலான தையல் மிஷின்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் பெட்டி கடை வைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Next Story






