என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய காட்சி.
    X
    கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய காட்சி.

    கிராமசபை தீர்மானங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

    பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உபதலை ஊராட்சி பெரியபிக்கட்டியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்ரா மச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
     
    மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.   கூட்டத்தில் கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும்,அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்துதல் குறித்தும், மகளிர் திட்டம்,குழந்தைகள் உதவி அவசர எண், முதியோர் உதவி எண்,விவசாயிகள் கடன் அட்டை ஆகிய கூட்டுப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் பொது மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல் படுத்தி வருகிறார். கிராம சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும். 
     
    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பசுமை வீடு, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளான சாலை வசதி,மின்சார வசதி, மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம் சார்பில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எடை ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்குதல்,கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்குதல், தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு கடனுதவி பெற பி.எம்.கிசாம் கார்டு, பயோ மெட்ரிக் கார்டு போன்றவைகளும் வழங்கப்படுகின்றன. 

    எனவே பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
      
    முன்னதாக, உபதலை ஊராட்சிக்குட்பட்ட பெரியபிக்கட்டியில்  வனத்துறை அமைச்சர்  மரக்கன்றுகளை நடவு செய்தார். பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம் சார்பில், அதனைதொடர்ந்து உபதலை ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பொது மக்களும் பயன் பெறும் வகையில் உபதலை ஊராட்சி தலைவர் சார்பில் கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை வாகன சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    Next Story
    ×