என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை செய்யப்பட்ட துரைசாமி.
    X
    கொலை செய்யப்பட்ட துரைசாமி.

    சென்னிமலை அருகே விவசாயியை கொன்று நகை கொள்ளை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா மூலம் தனிப்படை போலீசார் விசாரணை

    சென்னிமலை அருகே விவசாயியை கொன்று நகை கொள்ளை சம்பவம் குறித்து சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா மூலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னிமலை அருகே விவசாயியை கொன்று நகை கொள்ளை சம்பவம் குறித்து சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா  மூலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 68).விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (65). இவர்களுக்கு  கீதா, சுமதி என 2 மகள்களும், நாகராஜ் என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித் தனியே வசித்து வருகின்றனர்.  

    துரைசாமி, ெஜயமணி ஆகிய இருவரும் தினமும் இரவு வீட்டின் வெளியே வாசலில் கட்டிலில் படுத்து தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு துரைசாமியும், ஜெயமணியும் வீட்டு வாசலில் ஆளுக்கு ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். 

    அப்போது அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துரைசாமியை அரிவாளால் வெட்டி–யுள்ளனர். மேலும் அவரது மனைவி ஜெயமணியையும் அரிவாளால் வெட்டி வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை–யர்கள் வெட்டியதில் துரைசாமி சம்பவ இடத்தி–லேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். ஜெயமணி உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தார். 

    சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை போலீசார் துரைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜெயமணியை மீட்டு சிகிச்சைக்காக அதே பெருந்துறை  மருத்துவ–மனையில் அனுமதித்தனர். இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை கண்டு–பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

     வட மாநிலத்தவர்கள் இந்த கொள்ளை -கொலை சம்பவத்தில் ஈடுபட்டி–ருக்கலாம் என தகவல் பரவியது. ஆனால் இது குறித்து முழுமையாக விசாரித்த பிறகு கூறமுடியும் என போலீசார் தெரிவித்தனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கொலை நடந்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இதனால் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டி–ருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் துரைசாமி வீட்டுக்கு அடிக்கடி வருபவர்கள் விவரங்கள் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    உப்பிலிபாளையம் பகுதியை ஒட்டி திருப்பூர் பகுதி தொடங்குகிறது. திருப்பூர் பகுதிகளில் இதேபோல் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.  அதில் ஈடுபட்ட கும்பல் தான் இந்த கொலையில் ஈடுபட்ட இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இதற்கிடையே கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஜெயமணிக்கு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நலம் தேறிய பிறகு அவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×