என் மலர்
உள்ளூர் செய்திகள்

முட்டைகோஸ் அறுவடை நடந்த போது எடுத்தப்படம்.
முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைடைந்துள்ளனர்.
தாளவாடி:
தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடி மலைப்ப–குதியில் தாளவாடி, கொங்க–ள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதிநகர், கெட்டவாடி, அருள்வாடி போன்ற 40 கிராமங்கள் உள்ளன.
இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். தங்களுடைய நிலங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய காய்கறிகளை அதிகம் சாகுபடி செய்து வருகிறார்கள்.
குறிப்பாக சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான தோட்டங்களில் முட்டைக்கோஸ் அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஆனால் தோட்டத்துக்கு வந்து நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைக்கோசை 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரையே கேட்கிறார்கள். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, ‘3 மாத பயிரான முட்டைகோசை ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்தால் நாற்று நடுதல், களை எடுத்தல், உரம், மருந்து என ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இந்த பருவத்தில் ஓரளவு மழை பெய்ததால் முட்டைக்கோஸ் நன்றாக வளர்ந்துள்ளது.
ஆனால் எங்களிடம் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டை கோசை 3 ரூபாய்க்கு கேட்கிறார்கள்.ஆனால் கடைகளில் சில்லரை விற்பணையில் கிலோ ரூபாய் 25,முதல் 30 வரை விற்பணை செய்யபடுகிறது விளைச்சல் அதிகம் என்று கூறி விலை குறைக்கிறார்கள்.
ஒரு கிலோ முட்டை–க்கோசை நாங்கள் 6 ரூபாய்க்கு விற்றால்தான் கூலியாவது எங்களுக்கு கிடைக்கும்.
தற்போது 3 ரூபாய்க்கு கேட்டால் எங்களால் அசல் தொகையை கூட எடுக்கமுடியாது தொடர்ந்து 2 மாதமாக இதே விலை நீடிப்பதால் நஷ்டத்துக்கு விற்கிறோம்.
இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு விவசாயி–களுக்கும் லாபம் வரும் வகையில் வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Next Story






