என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடிேபாதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    வெள்ளோடு அருகே குடிேபாதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகறார்கள்.
    பெருந்துறை:

    வெள்ளோடு அருகே குடிேபாதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகறார்கள்.

    பெருந்துறையை அடுத்துள்ள வெள்ளோடு, கனகபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி  மகன் கார்த்தி  (35). கார்த்தி மது போதைக்கு அடிமையானவர். அடிக்கடி மனைவியிடம், பெற்றோரிடமும், உறவினர்களிடமும், ஊர்க்காரர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

    கார்த்திக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக்கின் மனைவி கவிதா புகார் அளித்ததின் பேரில் அங்கு விசாரித்துள்ளனர்.

     இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மது போதையில் இருந்த கார்த்தி  கனகபுரம் பகுதி கருப்பராயன் கோவில் அருகே உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    அந்த வழியாக சென்றவர்கள் கார்த்திக்கின் தந்தையிடம் தெரிவித்ததன், பேரில் அவர் அங்கு சென்று பார்த்து விட்டு வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வெள்ளோடு எஸ்ஐ மணிவண்ணன் வழக்கு ப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    Next Story
    ×