என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஓட்டல் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

    பவானி அருகே ஓட்டல் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சித்தோடு:

    பவானி அருகே ஓட்டல் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பைபாஸ் பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.  இந்த ஓட்டலுக்கு சம்பவத்தன்று இரவு  2 இளைஞர்கள் சாப்பிடுவதற்காக வந்தனர். அவர்கள் மது போதையில்  இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஓட்டல் ஊழியர் வசந்த் என்பவர் அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தார். அப்போது அந்த தண்ணீர் உப்பு தண்ணீராக இருந்ததாக கூறி அவர்கள் ஊழியரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) தகராறு செய்த வாலிபர்கள் உள்பட 6 பேர் மீண்டும் அந்த ஓட்டலுக்கு வந்தனர். ெதாடர்ந்து அவர்கள் ஓட்டலில் வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர்கள் வசந்த் மற்றும் விஜய்யாலன் ஆகியோரிடம் தகராறு செய்து அவர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இதில் அவர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்டு சகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காளிங்க ராயன்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த மேகவர்ணன் (25), கவின்குமார் (27), யோகேஷ் பெருமாள் (22), சுதர்சன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    மேலும் காலிங்க ராயன்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (24), சங்கர் (32) ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×