என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

    பெருந்துறை அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் சிங்  (38). இவர் தனது மனைவி தாராபாய் (55), மகள்கள் கவிதா (25), காகிதா (12),யோசிகா (2) ஆகியோருடன் காரில் குடும்பத்துடன் அவினாசி யில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.

    அவர்கள் அவினாசியில் இருந்து மீண்டும் நாமக்கல்லுக்கு காரில் வந்து கொண்டு இருந்த னர். சந்தோஷ் சிங் காரை ஓட்டி வந்தார். அவர்கள் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிகோவில் ரோடு பைபாஸ் அருகே வந்தனர்.  அப்போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த லாரியின் பின் பகுதியில் கார் எதிர்பாராத விதமாக  மோதியது.

    இதில் சம்பவ இடத்தி லேயே சந்தோஷ் சிங் பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம்  மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ஆனால் செல்லும் வழியிலேயே தாராபாய் இறந்தார். இதில்  படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது  குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    Next Story
    ×