என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
சத்தியமங்கலம் அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிவியார் பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சிலர் கும்பலாக சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேவராஜ் (27), நாகசுபாஷ் (28), பிரகாஷ் (22), சீனிவாசன் (35) என தெரியவந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சேவல் மற்றும் ரூ.10,500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






