என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரெயில்வே நிர்வாகம் விளக்கம்
  X
  ரெயில்வே நிர்வாகம் விளக்கம்

  வெளியூரில் தேர்வு மையம் ஏன்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெளியூரில் தேர்வு மையம் ஏன்? என்று ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
  மதுரை

  ரெயில்வே தேர்வுக்கு வெளிமாநிலங்களில்  மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மதுரை எம்பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு எழுப்பி இருந்தார். 
  இதுதொடர்பாக ரெயில்வே தேர்வாணையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ரெயில்வேவேலைக்கான முதல்நிலை கணிப்பொறி தேர்வு 7 கட்டங்களாக நடந்தது. 

  இதில் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது. அப்போது ‘தேர்வை முழுமையாக ஒரே வேளையில் நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை வலுத்தது.

  ஒரே வேளையில் கணிப்பொறி தேர்வு நடத்த பெரிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே விண்ணப்ப தாரர்கள் அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத கடிதம் அனுப்பப்பட்டது.

  அகில இந்திய அளவிலான தேர்வுகளில் தமிழகத்திற்கு மட்டுமின்றி மற்ற மாநில விண்ணப்பதாரர்களுக்கும் பொதுவான தேர்வு மைய முறை பின்பற்றப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×