என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தக்கலையில் கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம் - தந்தை நடத்திய பாசப் போராட்டத்தால் பரபரப்பு
    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே கேரளபுரத்தில் வசித்து வருபவர் அசோகன். இவரது மகள் ஷிவானி (வயது19).

    ஷிவானி சுங்கா ன்கடை யில் உள்ள ஒரு கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த26-ந் தேதியன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை பல இடங்களில் தேடியும் காணாததால் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரை பெற்று கொண்ட போலீசார் மாய மான கல்லூரி மாண வியை தேடி வந்தனர். இந்நிலை யில் போலீசார் தேடி வரு வதை அறிந்த ஷிவானி நேற்று மாலை காதலனு டன்தன்னை சேர்த்து வைக்கு மாறு கூறி போலீஸ் நிலை யத்தில் காதலனுடன் தஞ்சமடைந்தார்.

    பின்னர் அவர் உதயமார்தாண்டம் பகுதியை சேர்ந்த அபிஸ் என்பவரை பல மாதங்களாக காதலித்து வந்ததாகவும், வீட்டில் தனது பெற்றோர் அதை அறிந்து மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தனக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என பயந்து வீட்டை விட்டு வெளியேறி பாறசாலையில் உள்ள  கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். 

    இதுபற்றி போலீசார் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அசோகன் போலீஸ் நிலையம் வந்து மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

    ஆனால் மகளோ காதலனுடன் செல்வதில் உறுதியுடன் இருந்தார். பல மணி நேரம் பாச போராட்டம் நடத்தியும் அவர் காதல னுடன் செல்வதில் உறுதி யாக இருந்ததால் தந்தை வேறுவழியின்றி கண்ணீ ருடன் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
    Next Story
    ×