என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  சுசீந்திரம் கோவிலில் தெப்ப திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2 ஆண்டுகளுக்கு பிறகு சுசீந்திரம் கோவிலில் தெப்ப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
  கன்னியாகுமரி:

  சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி, சித்திரை, ஆவணி திருவிழாக்கள் 10 நாட்களும், மாசி திருக்கல்யாணம் 9 நாட்களும் நடைபெறுவது வழக்கம். இதில் பெரிய திருவிழா சித்திரை தெப்ப திருவிழாவாகும்.

  கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகள் தெப்ப திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு க்கான சித்திரை திருவிழா நாளை (1-ந்தேதி) காலை 9 மணிக்கு கொடி யேற்றத்து டன் தொடங்குகிறது.
  இதற்காக 5 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளம் சுற்றுச் சுவர்கள், தெப்ப மண்டபம் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

  இடலாக்குடி பட்டாரியர் சமுதாய மக்களால் கொண்டு வரப்படும் கொடிப்பட்டம் இன்று மாலை கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. 1-ம் நாள் திருவிழாவான நாளை காலை கொடியேற்றத்திற்கு பிறகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை தேவார இன்னிசையும் நடக்கிறது.

  3-ம் நாள் திருவிழாவில் புஷ்ப வாகனத்தில் சுவாமி பவனியும், 5-ம் நாள் விழாவில் ரிஷப வாகன த்தில் சுவாமி பவனியும், 7-ம் நாள் திருவிழாவில் கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி பவனியும் நடக்கிறது.

  9-ம் திருவிழா அன்று காலை விநாயகருக்கு தேரில் கணபதி, அம்மன் தேரில் தாணுமாலயர், இந்திரன் தேரில் அம்மனும் ரத வீதிகள் வழியாக வலம் வருவார்கள். 10- நாள் வரும் 10-ந்தேதி இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.

  வண்ண விளக்கு, 100 எண்ணெய் விளக்குகளும் ஏற்றப்பட்டு தெப்பக் குளத்தில் 3 முறை தெப்பம் வலம் வரும். 3-வது முறை சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ரத வீதிக ளில் வாகன பவனிக்கு பிறகு சுவாமிக்கு ஆராட்டு நடக்கிறது.

  விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×