என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் அய்யப்பன் கோவில் அருகே வசித்து வருபவர் சுப்ரமணியன்(வயது 50). இவர் கரூர் போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். 

    இந்நிலையில் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியில் சென்றனர். பின்னர் சுப்ரமணியனின் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவில் இருந்து பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளது. உள்ளே உள்ள அறையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8½ பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

    பின்னர் இதுதொடர்பாக மணப்பாறை போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம்  விசாரணை நடத்தியதுடன்,  அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆராய்ந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×