என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டையில் ரூ.12 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள்- பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குமரவேல் செயல் அலுவலர் மாலா முன்னிலை வகித்தனர்.
11வது வார்டு கவுன்சிலர் கோல்ட் மணி பேசும்போது, விவேகானந்தா 1,2, 3வது தெருக்களில் கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
5வது வார்டு கவுன்சிலர் கோகுல கிருஷ்ணன் பேசும்போது, பேரூராட்சியில் கூடுதல் எலெக்ட்ரீஷியன்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பேரூராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளுதல் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வார்டு கவுன்சிலர்கள் சமிமாரஹீம், ஆப்தாபேகம், அபிராமி, இந்துமதிகோகுல், சுமலதா நரேஷ், கல்பனாபார்த்திபன், வெங்கடேசன், அருணாச்சலம், ஆனந்தி, கோகுல கிருஷ்ணன் கோல்ட்மணி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.