என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்கள பணியாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி முகாம்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது
குமரி மாவட்டத்தில் இன்று நடந்த தடுப்பூசி முகாம்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது - பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
நாகர்கோவில்:
தமிழகத்தில் கொரோனா 4-வது அைல பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்டம் முழுவதும்மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சம்பந்தப்பட்ட நபர்களை போன் மூலமாக தகவல் தெரிவித்து தடுப்பூசி செலுத்த வருமாறு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து பெரும்பாலான பொதுமக்கள் இன்று நடந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வந்திருந்தனர். தடுப்பூசி செலுத்த வந்த பொது மக்களுக்கு உடனடி யாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
முன்களப்பணியாளர் கள் பலரும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மாவட்டம் முழுவதும் இன்று 2200 இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. சுகாதாரத்துறை அதிகா ரிகள் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கிராமப்புறங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அரசு ஆஸ்பத்தி ரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் தடுப்பூசி மையங்களில் கூட்டம் குறை வாகவே இருந்தது.
இன்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில் மதியம் வரை 3 ஆயிரம் பேர் மட்டுேம தடுப்பூசி செலுத்தி இருந்தனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொரோனா இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் விளங்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story