என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மின் விளக்குகள் பொருத்தும் பணி
    X
    மின் விளக்குகள் பொருத்தும் பணி

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கூடுதல் மின் விளக்குகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கூடுதல் மின் விளக்குகள் - கும்பாபிேஷகத்தை முன்னிட்டு ஏற்பாடுகள்
    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவில் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலமும் ஆகும். 

    இங்கு கும்பாபிஷேகம் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிற ஜூலை மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வர்ணம் பூசுதல், படம் வரைதல், மர வேலைகள், மற்றும் அச்சு வேலைகள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோயில் பிரகாரத்தில் ஒளி உமிழும் விளக்குகள் புதியதாக பொருத்தும் பணி நடந்து வருகிறது. உள்பிரகாரத்தில் 10 விளக்குகள் பொருத்தும் பணிமுடிவடைந்தது. 

    வெளிப்பிரகாரத்தில் 58 விளக்குகள் பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. மேலும் அனைத்து பகுதிகளிலும் புதியதாக கூடுதல் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. 

    தற்போது உள்பிரகாரத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமாக இந்த விளக்குகள் இயக்கப்பட்டதை அடுத்து கோயில் உட்பிரகாரம் பளிச் என இரவில் காட்சி தருகிறது. வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில் கிழக்கு மற்றும் மேற்கு வாயிலில் கேமிராவும் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    கோவில் விளக்கணி மாடத்தின் இறுதி கட்ட பணிகள், தரை சீரமைக்கும் பணிகள், மற்றும் மியூரல் ஓவியப்பணிகள் நடந்து வருகிறது. கோயிலில் தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டபோது கும்பாபிஷேகம் முடியும் வரை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை நாளில் மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

    அதன்படி இன்று (30-ந் தேதி) காலை 5.30 மணிக்கு மிருத்துஞ்சய ஹோமமும், 7 மணிக்கு கணபதி ஹோமமும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×