என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்புத்திட்டம்- ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை நாட்களை அதிகரித்து அரசு உத்தரவிட வேண்டும்.
உடுமலை:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க குடிமங்கலம் ஒன்றிய பேரவை கூட்டம், உடுமலையில் நடந்தது. கூட்டத்துக்கு ராணி தலைமை வகித்தார். ஜெயலட்சுமி வரவேற்றார்.
வேலை அறிக்கையை, கலைவாணி சமர்ப்பித்தார்.கூட்டத்தில் ரேஷன்கடைகளில், பொருட்களை தரமாகவும், எடை சரியாகவும் வழங்க வேண்டும்.
பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கான சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை நாட்களை அதிகரித்து அரசு உத்தரவிட வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட பலர் பேசினர்.
மேலும், ஜனநாயக மாதர் சங்க குடிமங்கலம் ஒன்றியத்தலைவராக ராசாத்தி, ஒன்றிய செயலாளராக கலைவாணி, பொருளாளராக பழனியம்மாள், துணைத்தலைவராக அம்சலட்சுமி, துணைச்செயலாளராக சசிகலா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story