என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் முக ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் முக ஸ்டாலின்

    தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகையில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடியில் இன்று அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐந்து லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    Next Story
    ×