என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்
மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார்.
மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டய மருந்தாளுநர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கும் அரசாணை எண்.5ஐ ரத்து செய்ய வேண்டும். மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்துக் கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்எ ன்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார், சுந்தரேசன், இணைச் செயலாளர்கள் பலராமர், பரோசுரின், மற்றும் கமலாதேவி உள்ளிட்ட மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






