என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளக்கு  பூஜை நடந்த போது எடுத்த படம்.
    X
    விளக்கு பூஜை நடந்த போது எடுத்த படம்.

    கவுண்டம்பாளையம் காமாட்சிஅம்மன் கோவிலில் விளக்கு பூஜை

    கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையம் காமாட்சிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டம்பாளையம் காமாட்சிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது. 

    விவசாயம் செழிக்கவும், நெசவுத்தொழில் வளம் பெறவும், வியாபாரம் பெருகவும், பொதுமக்கள் பெண்கள் மற்றும்  குழந்தைகள் கொரோனா பெரும் தொற்றில் இருந்து காபாற்றவும், உலக நன்மைக்காக பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்து காமாட்சிஅம்மனை வழிபட்டனர். 

    காமாட்சி அம்மன் துதிபாடல்கள் பாடியும், பராசக்தி சரணம் போற்றி கூறி  பெண்கள்  குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். 

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் கணேசன், கோவில் பூசாரி கார்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×