என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கொரோனாவுக்கு ஒருவர் மட்டும் சிகிச்சை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மார்ச் மாதம் முதல் குறைய தொடங்கி ஒற்றை இலக்கில் பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதனையடுத்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு கடந்த 17-ந் தேதி ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 20-ந் தேதி ஒருவருக்கும், 21-ந் தேதி மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதில் கடந்த 21-ந் தேதி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனை அடுத்து மாவட்டத்தில் 2 பேர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 670 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 935 ஆக உயர்ந்து உள்ளது.
இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் மாவட்டத்தில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story






