என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைநிறைகளை எடுத்துரைத்தனர்.
அதனையடுத்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிலைமைகளை எடுத்து கூறி, இன்னும் ஓரிரு வாரங்களில் நிலைமை சரி செய்யப்படும் என உறுதியளித்தனர்.
இதற்கிடையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் வந்திருக்கையில் மக்கள் நலனில் முக்கியமான துறையான சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை யென கூட்டத்தின் வாயிலாக கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக்கேயன் இனி வரும் கூட்டங்களில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை யெனில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல குழு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

Next Story