என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம்
    X
    முகாம்

    விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள்

    சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் 5 நாட்கள் நடக்கிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பி.எம் கிசான் எனப்படும் பிரதமரின்  விவசாயிகள் கவுரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள்  பெற்று பயனடைந்து வருகின்றனர்.

    பி.எம். கிசான்  பயனாளிகள்  அனைவருக்கும் கிசான் கடன்அட்டை கிடைப்பதற்கு அரசினால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வரப்படுகிறது. இதற்கான கிசான் கடன்அட்டை சிறப்பு வாராந்திர முகாம், சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும்  இன்று (27&ந் தேதி) முதல் வருகிற 1ந்தேதி வரை நடைபெற உள்ளது. 

    முகாமில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.  எனவே பி.எம். கிசான் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் மற்றும் இதரவிவசாயிகள் கலந்துகொண்டு கிசான் கடன்அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தினை பெற்று, சேவை வழங்கும் வங்கிகளில் விண்ணப்பத்தினை சமர்ப்பித்து கிசான் கடன் அட்டை பெற்று பயனடையலாம். 

     மேற்கண்ட கிசான் கடன்அட்டை மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்வரை வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×