என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ்சில் இறந்த பயணி
    X
    அரசு பஸ்சில் இறந்த பயணி

    மதுரையில் இருந்து கடலூர் வந்த அரசு பஸ்சில் இறந்த பயணி- போலீசார் விசாரணை

    கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ்சில் இருந்து அனைத்து பயணிகளும் இறங்கினர். ஆனால் ஒரு நபர் மட்டும் இறங்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கண்டக்டர் அந்த நபரிடம் சென்று பார்த்தபோது இறந்த நிலையில் இருந்தார்.
    கடலூர்:

    மதுரையிலிருந்து கடலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை வடலூர் வழியாக வந்து கொண்டிருந்தது  அப்போது வடலூரில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஏறி கடலூருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ்சில் இருந்து அனைத்து பயணிகளும் இறங்கினர். ஆனால் ஒரு நபர் மட்டும் இறங்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கண்டக்டர்  அந்த நபரிடம் சென்று பார்த்தபோது இறந்த நிலையில் இருந்தார்.

    இதனைத் தொடர்ந்து கடலூர் பஸ் நிலையம் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் கண்டக்டர்  புகார் செய்தார். அதன்பேரில் 108 ஆம்புலன்சை பஸ் நிலையத்திற்கு வரவழைத்து இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்  இறந்தவர் விருத்தாசலம் வளையமாதேவி சேர்ந்த ராஜேந்திரன் என தெரிய வந்தது.

    ராஜேந்திரன் எப்படி இறந்தார்?  என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×