என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேளாண் உபகரணங்களை பெற்ற விவசாயி.
  X
  வேளாண் உபகரணங்களை பெற்ற விவசாயி.

  வேளாண் உபகரணங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள் முதல்வருக்கு நன்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேளாண் உபகரணங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள் முதல்வருக்கு நன்றி கூறினர்.
  மயிலாடுதுறை:

  முன்னாள் முதல்வர் கருணாநி விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக இலவச மின்சாரம், உழவர் சந்தை, ரூ.8000 கோடி விவசாயிகளின்

  நகை கடன் தள்ளுபடி, 1996ம் ஆண்டு ரூ.250 கோடியில் ஏரி குளங்கள் மறு சீரமைப்பு போன்ற திட்டங்களை கொண்டு வந்தார். இதேபோல் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன்

  விவசாயிகளுக்கென்று தனி பட்ஜெட், இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம், வேளாண்மை பணிகளை இயந்திர மயமாக்கல், சூரிய சக்தியினை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்துதல், ஒவ்வொரு

  மாவட்டத்திலும் உழவர் சந்தையில் சிறு தானியம் பயிர்வகை விற்பனை செய்ய அனுமதி போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  குறிப்பாக காவிரி டெல்டா

  மாவட்டங்களில் கால்வாய்கள், வாய்க்கால்கள் தூர்வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.5,158 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற

  திட்டங்களை விவசாயிகளுக்கு செயல்படுத்தினார்.  மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் கடப்பாரை, இரும்பு சட்டி, களைக்கொத்தி, மண்வெட்டி, 2 கதிர்அரிவாள்

  போன்ற வேளாண் உபகரணங்களின் தொகுப்புகளை 64,444  வேளாண்மை குடும்பங்கள்  பயன்பெறும் வகையில் வழங்கிடும் வகையில் முதலாவதாக 5 வேளாண்மை குடும்பங்களுக்கு முதல்வர் வழங்கி

  தொடங்கி வைத்தார். வேளாண் உபகரணங்களை வழங்கி வேளாண் உபகரணங்கள் தொகுப்பு, விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.2250 மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும்

  பழங்குடியினர் விவசாயிகளுக்கு 90 சதவிகிதம் மானியம் அல்லது ரூ.2700 மிகாமலும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் இத்திட்டத்தின் வாயிலாக சிறு, குறு விவசாய பெருமக்களின் உழைப்பு திறன்

  மேம்படுத்தப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கும் திட்டமாகும். வேளாண் உபகரண தொகுப்புகள் பயன்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது.

  மு.தென்னரசு என்ற விவசாயி கூறுகையில்:- மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளுர் கிராமத்தில் வசிக்கிறேன். சிறு விவசாயி. முதலமைச்சர் வேளாண்-மைத்-துறை சார்பாக விவசாயிகளுக்கு

  பண்ணை கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தில் மானிய விலையில் கருவிகள் வேண்டி வேளாண்மைத் துறையில் விண்ணப்பித்தேன். பண்ணை உபகரணங்களான

  கடப்பாரை, மண்வெட்டி, இரண்டு கதிர்அரிவாள் உள்ளிட்-டவைகள் மானிய விலையில் வழங்கப்பட்டது, இது போன்ற  திட்டங்கள் உழவு செய்யும் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 
   
  இத்திட்டத்தினை வழங்கிய முதலமைச்சருக்கும்,  வேளாண்மைத்துறை அமைச் சருக்கும் நன்றி.பா.மதி என்ற விவசாயி கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம்

  சோழம்பேட்டை ஊராட்சியில் வசிக்கிறேன். வேளாண்மைத்துறை சார்பாக விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்ததை தெரிந்து கொண்டு பண்ணை

  கருவிகள் வேண்டி விண்ணப்பம் செய்தேன். வேளாண்மைத்துறை சார்பாக மானியவிலையில் எனக்கு அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது.

  மஞ்சுளா, கணவர் பெயர் பஞ்சநாதன், என்ற விவசாயி கூறுகையில்: சீர்காழி வட்டம் அகணி கிராமத்தில் வசிக்கிறேன். 2 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துவரும் நான் வேளாண் உபகரண தொகுப்

  புகள் வழங்கும் திட்டங்களை தெரிந்து கொண்டு மானிய-விலையில் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை பெற, இணையத்தில் பதிவு செய்து கைப்பேசியில் குறுஞ்செய்தி--யின் மூலமாக  மானிய

  விலையில்  நான்கு வரிசை நெல்நடவு இயந்திரம் பெற்-றேன்.  இதன் மொத்த மதிப்பு  ரூ.2,68,000 ஆகும் அதில் 50 சதவீதம் மானி-யமாக ரூ. 1,34,000 பெற்றேன்.  இவ்வாண்டு நெல்சாகுபடி நெல்நடவு

  எந்திரத்தின் வாயிலாக மேற்கொண்டோம்.  நெல்நடவு இயந்திரம் பயன்படுத்துவதால் ஒரு ஏக்கருக்கு ரூபாய். 3,000வரை மிச்ச-மாகிறது 2 ஏக்கர் நிலத்திற்கு ரூபாய். 6,000 வரை மிச்சமாகிறது.  இதனால்

  எங்களுக்கு சுமார் ரூபாய். 40,000 வரை வருமானம் கிடைக்கிறது.  இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி என்னை போன்ற ஏழை சிறு குறு விவசாயிகளின் வாழ்வா-தாரத்தை பேணிவரும் மைத்துறை அமைச்சர்

  ஆகியோருக்கும் அனைத்து விவசாய பெருமக்கள் சார்பாக நன்றி. இவ்வாறு விவசாயிகள் கூறின.
  Next Story
  ×