என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    திட்டக்குடி, காட்டுமன்னார்கோவிலில் விவசாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் முருக வேல் தலைமை தாங்கினார். மாவட்ட குழு விவசாய தொழிலாளர் சங்கம் சிதம் பரம்இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில நிர்வாகக் குழு மணிவாசகம் மற்றும் மாவட்ட நிர்வாகக் குழு நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், ஜெயராமன் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணி யாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் மற்றும் ரூ.281 சம்பளம் வழங்க வேண்டும் என கோரி பேசினார்கள்.

    திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கு விவசாய தொழிற் சங்க நிர்வாகி குப்புசாமி தலைமை தாங்கினார். பெரு மாள்,முருகன், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு சுப்பி ரமணியன், வட்ட செய லாளர் முருகன், மாவட்ட குழு உலகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினார். இதில் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×