என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
    X
    பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

    சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

    செம்பனார்கோயில் அருகே சீதளாதேவிமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் 48-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. 

    இதனை முன்னிட்டு இரட்டைகுளக்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பபட்டது. சக்தி கரகத்துடன் பால் காவடி, அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் வாயில் 16 அடி நீள அலகுகுத்தியும

    வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்க தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி

    விரதமிருந்த பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தீமிதித்து தங்களின் நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தீயணைப்புத்

    துறையினர் மற்றும் செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×