என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கடையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    X
    திருக்கடையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    சிறப்பு கிராம சபை கூட்டம்

    திருக்கடையூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஒன்றியம், திருக்கடையூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி

    சிவராஜ் தலைமை தாங்கினார்.பற்றாளர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் துளசிரேக்கா ரமேஷ், செம்பனார்கோயில் ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.

    ஊராட்சி துணை தலைவர் அசோக் (எ) சம்பத்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் வெங்கடேசன் அரசு வடிவமைத்த தீர்மா-னங்களை படித்துகாட்டினார். பொதுமக்களிடமிருந்து

    பல்வேறு குறைகள் கேட்கப்பட்டது. அதனடிப்படையில் நல்ல குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார சீர்கேடுகளை செய்துவரும் பன்றிகளை கூடியவிரைவில் உரிமையாளர்களிடம்

    சொல்லி கட்டுப்படுத்தப்படும். திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சியில் ஏற்படும் குப்பைகளை அவ்வப்போது ஆட்கள் கொண்டு

    சுத்தப்படுத்தப்படும். சுகாதாரமாக இருக்க பொதுமக்கள் ஆதரவோடு ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வார்டு உறுப்பினர் செந்தில் நன்றி கூறினார்.
    Next Story
    ×