என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனங்கள் ஏலம்
கடலூரில் இன்று காலை மது விலக்கு அமல்பிரிவில் வாகனங்கள் ஏலம்
கடலூரில் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 124 என மொத்தம் 134 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா போலீஸ் நிலையங்கள் மற்றும் மது விலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு சம்பந்தமாக பதிவு செய்யபட்ட வழக்கில், மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 124 என மொத்தம் 134 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.
மேற்படி 134 வாகனங்களையும் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவின் படி இன்று (25- ந் தேதி) காலை கடலூர் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஏலம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமை தாங்கினார். மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார். அப்போது வாகனங்களின் தரம் கண்டறிந்து அதன் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டது.
இதில் ஏராளமான வாகன விற்பனையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் வழக்கத்தைவிட அதிகளவில் கூட்டமாக காணப்பட்டது.
Next Story






