என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.எம்.சி.காலனி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரி சிக்கிய காட்சி.
வேலூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி
வேலூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரியால் 3 மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எம்.சி. காலனி பிரதான சாலையில் இன்று காலை 6 மணிக்கு செங்கல் லாரி வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு லாரி பதிந்து கொண்டது.
இதனால் லாரியில் ஏற்றப்பட்டு இருந்த செங்கற்களை கீழே இறக்கி பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைத்து லாரியை மீட்டனர். இதனால் 3 மணி நேரம் அந்த பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ ஆபீஸ் சாலையில் லாரி ஒன்று வந்த போது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. லாரி பள்ளத்தில் சிக்கியது.போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வேலூரில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. இப்போதே இப்படியென்றால் மழை காலம் வரும் போது சாலைகளில் எந்த இடத்திலும் பள்ளம் விழுந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலை அமைக்கும் பணிகளை தரமாக அமைக்க வேண்டும். இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத் தியுள்ளனர்.
Next Story






