என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி வாலிபர் பலி
    X
    திட்டக்குடி வாலிபர் பலி

    திட்டக்குடி அருகே பஸ்சில் பயணம் செய்த வாலிபர் திடீர் பலி

    திட்டக்குடி அருகே பஸ்சில் பயணம் செய்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு காஞ்சிசு நகரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் நேற்று திருச்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இளையராஜாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இளையராஜா மயக்க மடைந்து விழுந்தார். உடனே அவரை மீட்ட பயணிகள் இளையராஜாவை சிகிச்சைக்காக தொழுதூர் ஆரம்பம் சுகாதார நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளையராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×