என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி‌ஷம்
    X
    வி‌ஷம்

    வாலிபர் கிண்டல் செய்ததால் வி‌ஷம் குடித்த மாணவி

    பண்ருட்டி அருகே சிறுமியை கிண்டல் செய்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை குட்டைதெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி திடீரென வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எதற்காக சிறுமி வி‌ஷம் குடித்தார் என்பது தெரியாத நிலையில் பண்ருட்டி போலீசில் சிறுமியின் தந்தை நடராஜன் புகார் செய்தார்.

    போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சிறுமி பள்ளிக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும் கேலி, கிண்டல் செய்து வந்தது தெரியவந்தது.

    இதில் மனமுடைந்த அந்த சிறுமி வி‌ஷம் குடித்ததாக போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியை கிண்டல் செய்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×