என் மலர்
உள்ளூர் செய்திகள்

நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டு விழா நடந்த போது எடுத்த காட்சி.
நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டுவிழா
முத்து ரத்தின அரங்கம் பள்ளி வளாகத்தில் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின் ஆண்டு விழா கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வளவன் ஆகியோர் கலந்துகொண்டு மழலையர்களின் நடன நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல டாக்டர் ரத்தின தனவேந்தன் மற்றும் கால்நடை மருத்துவர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மழலையர்களை வாழ்த்திப் பேசினார்.
மேலும் உலக கவிஞர்கள் சங்க நிறுவனர் புதுவை குமார், டாக்டர் ரங்கநாயகி வளவன் பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா பள்ளியின் துணை முதல்வர் மங்கையர்கரசி பள்ளியின் ஆலோசகர் ரத்னப்பிரியா அருண்குமார் கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுந்தர நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லக்ஷ்மி பிரியா, மகாலட்சுமி, சோபியா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






